ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறிய ஆரி..!

215

aari

பழைய சினிமா திரையரங்கத்தை அதாவது டூரிங் டாக்கீஸ் ஒன்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டு வரும் படம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’.. இந்தப்படத்தின் நாயகனாக ஆரி நடித்துவருகிறார்.. இந்தப்படத்தில் அவருக்கு ரியல் எஸ்டேட் புரோக்கர் கதாபாத்திரமாம்.. இந்தப்படத்திற்காக பழமையான தியேட்டர் ஒன்றை படக்குழுவினர் வலைவீசி தேடினார்களாம்..

காரணம் படத்தின் ஒரு கதாபாத்திரமாக தியேட்டரும் இடம்பெறுகிறதாம். அதனால் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று டைட்டிலும் வைத்தார்களாம். கடைசியாக பூந்தமல்லியில் அவர்கள் தேடியதுபோல ஒரு தியேட்டர் கிடைக்கவே, அங்கே படப்பிடிப்பை நடத்த முடிவுசெய்துள்ளார்களாம்.

Comments are closed.