ஹேப்பி பர்த்டே டூ நயன்தாரா..!

256

nayanthara-birthday-1

லேடி சூப்பர்ஸ்டார்.. ஆம்.. அதுதான் ரசிகர்கள் நயன்தாராவுக்கு சூட்டியிருக்கும் பட்டம்.. 2005ல் ‘அய்யா’ படத்தின் மூலமாக நுழைந்து “ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என தனது அழகாலும் நடிப்பாலும் தமிழ்சினிமா ரசிகர்களை பல வருடங்களாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்.. ஆம்.. 32 முடிந்து 33ல் அடியெடுத்து வைக்கிறார்.

மலையாளத்தில் இருந்து வந்தாலும் கிட்டத்தட்ட 12 வருடங்கள் தமிழ், தெலுங்கு இரண்டிலுமே இன்றும் முன்னணி ஹீரோயின் இவர்தான். அதிலும் இந்த வருடமும் நயன்தாரா வருடம் என்று சொல்லும் விதமாக இதுவரை மட்டுமே அவர் நடித்த ஆறு படங்கள் வரிசையாக வெளியாகி அவரை நம்பர் ஒன் இடத்திலேயே உட்கார வைத்திருகின்றன. இன்னும் மூன்று படாங்களில் நடித்து வருகிறார்.

தனி ஒரு ஆளாக ஒரு படத்தை தன்னால் தாங்கிப்பிடிக்க முடியும் என்பதை ‘மாயா’ வெற்றி மூலம் நிரூபித்தார் நயன்தாரா. இடையில் விடுபட்டு போயிருந்த தனது மலையாள சினிமா உலக உறவையும் கடந்த வருடம் முதல் வெற்றிகரமாக புதுப்பித்துள்ளார். இடையில் இரண்டுமுறை இவரது வாழ்க்கையில் காதல் சூறாவளி சுழன்று அடிக்க, அவற்றையெல்லாம் ஒதுக்கி, அதிலிருந்து வெளியேறி இப்போது புடம்போட்ட தங்கமாக மின்னுகிறார் நயன்தாரா..

மீண்டும் தனது புது இன்னிங்ஸில் ரவுண்டுகட்டி அடிக்கிறார் நயன். தற்போது எந்த ஈகோவும் பார்க்காமல் இளைய தலைமுறை ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழ்சினிமாவில் நயன்தாரா மேற்கொள்ள வேண்டிய பயணம் இன்னும் இருக்கிறது. அவரது வெற்றிப்பயணம் இனிதே தொடர, இன்று பிறந்தநாள் காணும் நயன்தாராவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

Comments are closed.