
ஆண்மை தவறேல் படத்தின் மூலம் இயக்குனராவார் குழந்தை வேலப்பன்.. தற்போது அவரது இரண்டாவது படமாக ‘யாக்கை’ என்கிற படத்தி உருவாக்கியுள்ளார்.. கிருஷ்ணா-ஸ்வாதி ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராதாரவி, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஜோக்கர் குருசோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார்..
இந்தப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது.. இந்த விழாவில் இயாகுனர்கால் விஷ்ணுவர்தன், கரு பழனியப்பன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.. விழாவில் பேசிய இயக்குனர் குழந்தை வேலப்பன் ஷாக்கிங் நியூஸ் ஒன்றை கூறினார்.,
கொடைக்கானல் மலையில் பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, கிருஷ்ணா ஸ்வாதி இருவரிடமும் காட்சி பற்றி விளக்குவதற்காக அருகில் சென்றபோது கால் தடுமாறி, மலைச்சரிவில் கீழே விழ இருந்தராம்.. நல்லவேளையாக கிருஷ்ணாவும், சுவாதியும் அவரை காப்பாற்றினார்களாம்.
Comments are closed.