‘அப்புக்குட்டிக்கு இன்னொரு விருது பெற்றுத்தருமா ‘காகித கப்பல்’..!

214

kagitha-kappal-audio-launch

நேரம், யோகம் இதனுடன் திறமை இருந்தால் ஒரு படஹ்தில் கதாநாயகனாகவே நடிக்க முடியும், அத்துடன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வாங்கமுடியும் என நிரூபித்தவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான அப்புக்குட்டி.. ஆம்.. ‘அழகர்சாமியின் குதிரை’ படம் அவரை சிறந்த நடிகராக அறியச்செய்து அவருக்கு தேசியவிருதும் வாங்கித்தந்து.

தற்போது அதேபோன்று காகித கப்பல்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் அப்புக்குட்டி.. சிவராமன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அப்புக்குட்டிகு ஜோடியாக தில்லிஜா என்பவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்.பி.முத்துராமன், வெற்றிமாறன், நடிகர் நட்டி ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள். இந்தப்படமும் அப்புக்குட்டிக்கு விருதுகளை பரிசளிக்கும் என நம்பலாம்.

Comments are closed.