மீண்டும் ‘கதை’ நாயகனாக ‘காகித கப்பல்’ விடும் அப்புக்குட்டி..!

255

appukutty
இயக்குனர் சுசீந்திரனால் வெண்ணிலா கபடி குழு’ படத்தில் அறிமுகமான நகைச்சுவை நடிகர் அப்புக்குட்டி என்கிற சிவபாலன், அதே சுசீந்திரனால் கதையின் நாயகனாக ‘அழகர்சாமியின் குதிரை’ மூலமாக ஹீரோவாகவும் மாறினார். தேசியவிருதையும் வென்றார். ஆனால் அந்த ரூட் தனக்கு சரிபடாது என முடிவுசெய்தவர் தொடர்ந்து காமெடி வேடங்களிலேயே நடித்து வருகிறார்..

ஆனால் நேரம் வந்தால் சும்மா விட்டுவிடுமா என்ன..? இப்போது மீண்டும் அப்புக்குட்டியை ‘காகிதக்கப்பல்’ படம் மூலம் கதையின் நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். நாயகியாக தில்லிஜா என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார். எவர்கிரீன் நிறுவனம் சார்பில் வி.ஏ.துறை தயாரிக்கும் இந்தப்படத்தை சிவராமன் என்பவர் இயக்குகிறார்.. கதையின் லைனும் அப்புக்குட்டிக்கு தோதாகவே அமைத்திருகிறார்கள்.

ஒன்பது வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன், நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன் கதையின் நாயகன். படித்த பெண்மணி இந்த கதையின் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் இருவரும் மணம் முடிக்கின்றனர். படிக்காதவன் படித்தவளாக இருந்தும் தரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். கதாநாயகியின் ஒரே ஒரு ஆசையால் அவர்களது வாழ்க்கை ‘காகித கப்பல்’ ஆகிறது. இதுதான் படத்தின் கதையாம்..

Comments are closed.