“பஞ்ச் டயலாக் பேசுவது கஷ்டம்” ; ‘றெக்க’ விழாவில் விஜய்சேதுபதி..!

220

rekka-audio-2

முன்பு நமது தமிழ்சினிமா ஜேம்ஸ்பாண்ட் ஆக இருந்த ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை நாயகன் என்றே குறிப்பிடுவார்கள்.. அந்த அளவுக்கு அவரது படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கும். இப்போது விஜய் சேதுபதியும் அப்படி ஒரு வெள்ளிக்கிழமை நாயகன் ரேஞ்சுக்கு தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார்.

கடந்த மாதம் தர்மதுரை, இந்த மாதம் ஆண்டவன் கட்டளை, அடுத்தவாரம் ‘றெக்க’ என அவரது படங்கள் தொடர்ந்து தியேட்டருக்கு வருகின்றன. அந்தவகையில் அடுத்தவாரம் ஆயுத பூஜை கொண்டாட்டமாக அவர் நடித்துள்ள றெக்க’ படம் வெளியாகிறது.. ரத்தினசிவா இயக்கியுள்ள இந்தப்பத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் வெளியிட்டார். இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய விஜய்சேதுபதி, “முதலில் ‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன் ஆனால் சிவா கதை சொன்ன விதம் வசனம் பேசிக்காட்டிய முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. படத்தில் எதற்கும் கஷ்டப்படவில்லை. ஆனால் ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதுதான் சிரமமாக இருந்தது. கஷ்டப்பட்டேன். இப்படத்தில் பஞ்ச்சுக்கே ஒரு பஞ்ச் இருந்தது” என்று தமாஷாக குறிப்பிட்டார்..

Comments are closed.