நயன்தாராவை கலாட்டா செய்து ஸ்தம்பிக்க வைத்த மம்முட்டி..!

195

nayanthara - mammootty

சமீபத்தில் ஹைதராபாத்தில் 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துள்ள தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் மம்முட்டிக்கு மலையாளத்தில் சிறந்த நடிகருக்கான விருதும், நயன்தாராவுக்கு தமிழில் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

விருது அரங்கத்திற்குள் நயன்தாரா நுழைந்தபோது அங்கே முன் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த மம்முட்டியை பார்த்து தனது வணக்கத்தையும் வாழ்த்தையும் சொல்வதற்காக சென்றார் நயன்தாரா.. அவரிடம் கை குலுக்க நயன்தாரா கைநீட்ட, மம்முட்டியோ கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொன்னார்.

பக்கத்தில் அமர்ந்திருந்த ரசூல் பூக்குட்டி, நிவின்பாலி ஆகியோர் இதை பார்த்து சிரிப்பை அடக்க சிரமப்பட, நயந்தாராவோ மம்முட்டியின் செயலால் ஷாக்கி கைகளை நீட்டியபடியே இருக்க, டக்கென எதிர்பாரதவிதமாக அவரது கையைப்பற்றி குலுக்கினார் மம்முட்டி. மேலும் நயன்தாராவிடம் ‘ஜஸ்ட் பார் பன்’ என சொன்னாராம். அதன்பின்னரே நயன்தாரா ரிலாக்ஸ் ஆனார்.

Comments are closed.