இளையதிலகத்தை காத்திருக்கச்சொன்ன இளையதளபதி..!

497

Vijay_and_Prabhu 1

சமீபகாலமாக முழுநீள குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஜொலித்து வருகிறார் இளையதிலகம் பிரபு. சமீபத்தில் வெளியான ‘உன்னோடு கா’ படத்தில் இவர்தான் கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மாஸ் ஹீரோவான விஜய்யுடன் ‘புலி’, ‘தெறி’ என வரிசையாக இடம்பெற்று வருகிறார்..

தற்போது தங்களது சொந்த தயாரிப்பில் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் பிரபு.. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றபோது, பிரபுவிடம் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை நீங்கள் தயாரிக்கப்போவதாக சொல்லப்படுகிறதே என கேள்வி ஒன்று முன் வைக்கப்பட்டது..

அதற்கு பதிலளித்த பிரபு.. விஜய் படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்கிற செய்தியில் உண்மையில்லை என கூறியவர்,, விஜய்யே தங்களிடம் நல்ல கதையுடன் தங்களது தயாரிப்பில் நடிக்க தானே தேடி வருகிறேன் என்றும் அதுவரை கொஞ்சம் காத்திருங்கள் என்றும் சொன்னதாக குறிப்பிட்டார் பிரபு.

Comments are closed.