அஜித், சிரஞ்சீவி படங்களில் அனுஷ்கா நடிக்கிறாரா..?

219

Anushka
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150 படமாக விஜய் நடித்த ‘கத்தி’ தான் ரீமேக் ஆகிறது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தான். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிப்பார் என்றும் சிரஞ்சீவியின் வயதுக்கு பொருத்தமான தேர்வாக அவர்தான் இருப்பார் என்றும் தெலுங்கு வட்டாரங்களில் ஒரு செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது..

இன்னொரு பக்கம் தமிழில் சிறுத்தை சிவாவின் டைரக்சனில் அஜித் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தி உலாவருகிறது.. இவர்கள் இருவரின் காம்பினேஷன் ‘என்னை அறிந்தால்’ படத்திலேயே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.. அப்படி ஒருவேளை அனுஷ்கா நடிக்கவில்லை என்றால் ‘இறுதிச்சுற்று’ புகழ் ரித்திகா சிங் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

Comments are closed.