மே-28ல் ஜெயராம் மகன் பட இசை வெளியீடு..!

206

meen-kuzhambbum-manpaanayum-02
மலையாளத்தில் முன்னணி நடிகரான ஜெயராம் தனது மகன் காளிதாஸை தமிழில் தான் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவேன் என விடாப்படியாக நின்று பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தில் ஹீரோவாக்கினார். கடந்த 2014ல் ஆரம்பித்த அந்தப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை..

இந்நிலையில் ‘மீன்குழம்பும் மண்பானையும்’ என்கிற படத்தில் காளிதாசுக்கு நடிக்க அழைப்பு வரவே அதை ஒப்புக்கொண்டு நடித்தும் முடித்துவிட்டார். இளையதிலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் பூஜாகுமார், ஆஸ்னா ஜவேரி, ஊர்வசி மற்றும் சிறப்பு தோற்றத்தில் கமல் ஆகியோர் நடித்துள்ளனர்.

அமுதேஷ்வர் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பிரபுவின் நன்னன் மகன் துஷ்யந்த தான் தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் மே-28ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

Comments are closed.