ரியாஸ்கானின் கண்ணுக்கு தெரியாத எதிரி யார்..?

175

MATRORUVAN
வெறுமனே சாதாரண வில்லனாக நடித்துவிட்டு போகிறார் என அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கும் ரியாஸ்கானிடம் இப்படி ஒரு அர்ப்பணிப்பு உணர்வா என வியக்கவைத்துள்ளார்.. காரணம் தமிழ் சினிமாவில் ஒரு மாறுபட்ட முயற்சியாக ‘மற்றொருவன்’ என்கிற பெயரில் ஒரே ஒரு நடிகர் நடித்து ஒரு படம் உருவாகியிருக்கிறது.

கதைப்படி ஒரே ஒரு பாத்திரம் தான் திரையில் தெரியும். அப்படிப்பட்ட பாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை புதுமுக இயக்குநர் மஜோ மேத்யூ இயக்கியுள்ளார். இது உளவியல் சார்ந்த கதை. ஆனாலும் எல்லாருக்கும் புரிகிற மாதிரியான முழுமையான கமர்ஷியல் படம்தான் என்கிறார் இயக்குனர்.

அதாவது. நாயகன் ஒவ்வொரு விஷயத்தையும் கனவு காண்பான். கனவில் காண்பது எல்லாம் நேரில் நிஜத்தில் ஒவ்வொன்றாக நடக்கிறது. ஒரு பெரிய கனவு காண்கிறான். அது நிஜமாகிறதா என்பதே க்ளைமாக்ஸ் .நாயகனுக்கு கண்ணுக்குத் தெரியாத எதிரி இருக்கிறான். அவனைப் பார்க்க முடியாது நிழலாகவே அறிய முடிகிறது. ஆனால் அது யார்? என்பது சஸ்பென்ஸ் என எதிர்பார்ப்பை கூட்டுகிறார் இயக்குனர் மஜோ மேத்யூ.

ஒரே ஒரு நாயகன் பாத்திரம் தவிர உயிருள்ள இரண்டு பாத்திரங்களாக ஒரு நாயும் யானையும் மட்டும்தான் தோன்றியுள்ளன. இருந்தாலும் இந்த 1 மணி 50 நிமிடக்கதை பரபரப்பும் விறுவிறுப்புமாக கமர்ஷியல் பார்முலாவில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், மூணார் என பயணித்து 45 நாட்களில் படத்தை முடித்து இருக்கிறார்கள்.

Comments are closed.