
கடந்த வருடம் நரேன், சூரி நடிப்பில் வெளியான ‘கத்துக்குட்டி’ படம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலத்தையும் விவசாயம் காக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பொட்டில் அடித்த மாதிரி சொன்னது. அன்தேபோல தற்போது இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ‘குகன்’ என்கிற படம் உருவாகியுள்ளது.
கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டர் ரகுராம், கலா குடும்பத்திலிருந்து அறிமுகமாகிறார் அரவிந்த் கலாதர். இவர் நடனத்தில் அசத்தியுள்ளார். கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த நேத்ரா என்கிற சுஷ்மா அறிமுகமாகியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், பஞ்சு சுப்பு, சிங்கம் புலி ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களின் யதார்த்தமான காதல் பின்னணியில் இன்றைய முக்கியத் தேவையான இயற்கை விவசாயத்தின் அவசியத்தை கதைக்களமாக சொல்லியுள்ளார் இயக்குனர் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற “வண்ணத்துப்பூச்சி” படத்தை இயக்கியவர்.
இந்த படத்திற்காகவே இயற்கை விவசாயத்தை தனது மூச்சாகக் கொண்டுள்ள திருநெல்வேலி ராஜா அய்யா அவர்களின் நூறு ஏக்கரில் அமைந்துள்ள இடத்திலும், இயற்கை சூழல் கொண்ட சிங்கத்தாகுறிச்சி என்ற இடத்திலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டனவாம். சென்சாரின் பாராட்டைப் பெற்று, வரி விலக்கு பெற்று வரும் ஏப்ரல்-22ல் திரைக்கு வருகிறது “குகன்”.
Comments are closed.