பருத்திவீரனை ஞாபகப்படுத்தும் ‘ஒன்பது குழி சம்பத்’..!

250

9 kuzhi sampath
கடந்த ஆறுமாத காலமாகவே அவ்வப்போது சோஷியல் மீடியா, இணையதளங்களில் உலாவும் பலர் கண்களில் தட்டுப்படுவது தான் ‘ஒன்பது குழி சம்பத்’ என்கிற படத்தின் டைட்டில்.. “நீங்க நினைக்கிற மாதிரி சங்கரபாண்டி வாத்தியார் ஒன்னும், பள்ளிக்கூட வாத்தியார் இல்ல.. அவரு குஸ்தி வாத்தியார்”னு சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்த் சொல்வார் இல்லையா..?

அதேபோலத்தான் ‘ஒன்பது குழி சம்பத்’ என்றதும் ஏதோ நில விவகாரம் தொடர்பான படமென்று நினைத்துவிடவேண்டாம்.. இருபது வருடங்களுக்கு முன்பு சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் விளையாடிய கோலி விளையாட்டில் ‘ஒன்பது குழி’ என்பது ஒரு வகையான விளையாட்டு.. அதில் எக்ஸ்பர்ட் தான் இந்த ‘ஒன்பது குழி சம்பத்’..

இந்தப்படத்தில் நடிகர் அப்புக்குட்டி தவிர நடிகர் நடிகைகள், இயக்குனர் உட்பட டெக்னீசியன்கள் என கிட்டத்தட்ட அனைவரும் புதுமுகங்கள் தான். புதுமுகம் பாலாஜி என்பவர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் என்கிற மலையாள நடிகை நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் மலையாளத்தில் திலீப்புக்கு ஜோடியாகவும், தற்போது ‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமார் ஜோடியாகவும் நடித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. படத்தை ஜ.ரகுபதி என்பவர் இயக்கியுள்ளார்.

கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சுசீந்திரன் கலந்துகொண்டு இசைத்தகட்டை வெளியிட்டார். அதில் திரையிட்டுக்காட்டப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது ‘பருத்தி வீரன்’ படத்தை பல இடங்களில் ஞாபகப்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால் டைரக்டர் புதுசா என்ன கதை சொல்லப்போகிறாரோ பார்க்கலாம்.

Comments are closed.