மருமகன் படத்துக்கு மாமன் இசையமைப்பாரா..?

239

rahman-gvprakash

Related Posts

தமிழில் இரண்டே இரண்டு படங்களை இயக்கினாலும், இரண்டையும் சூப்பர்ஹிட்டாக்கி இன்றுவரை பேசவைத்திருப்பவர் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன்.. ஒன்று ‘மின்சார கனவு’.. மற்றொன்று ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’.. மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த இரண்டு படங்களின் பாடல்களும் சூப்பர்ஹிட்டாகின.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் தமிழில் தனது மூன்றாவது படத்தை இயக்க முடிவுசெய்துள்ளாராம் ராஜீவ் மேனன்.. கதாநாயகனாக நடிக்க இருப்பது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தானாம். படத்திற்கு இசையமைப்பது ராஜீவ் மேனனின் பேவரைட் இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதுபற்றிய முறையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

Comments are closed.