டெம்பர் ரீமேக்கில் நடிக்கிறார் விஷால்..!

249

vishal in temper remake

கடந்த வருடம் தெலுங்கில் பூரி ஜெகநாத் டைரக்சனில் முன் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம் தான் ‘டெம்பர்’. படம் சூப்பர்ஹிட்டாகி, மிகப்பெரிய கலக்சனையும் அள்ளியது. தற்போது இந்தப்படம் தமிழில் ரீமேக்காகிறது… ஜூனியர் என்.ஆர் நடித்த கேரக்டரில் விஷால் நடிக்கிறார். படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பமாகும் என தெரிகிறது.

அதேசமயம் இந்தப்படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கப்போவதாகவும், காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுவது தவறான தகவல் என்று படக்குழுவினர் மறுத்துள்ளனர். இயக்குனர், ஹீரோயின் பணிபுரியும் படத்தில் நடிக்கும், மற்ற கலைஞர்கள், டெக்னீஷியன்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்கள்.

Comments are closed.