விக்ரமின் நண்பனாக கூட்டணி சேர்ந்த கருணாகரன்..!

249

Karunakaran-1
கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்பு வருகிறதா..? அதையும் மறுப்பதில்லை.. அதேசமயம் வழக்கம்போல ஹீரோவின் நண்பனாக நடிப்பதையும் நகைச்சுவை நடிகர் கருணாகரன் நிறுத்தவில்லை.. அதனால் அவரைத்தேடி வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன.. இப்போது லேட்டஸ்டாக விக்ரமின் நண்பனாக ‘இருமுகன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கருணாகரன்.

அரிமா நம்பி’ புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கம் இந்தப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, நித்யா மேனன் நடிக்கின்றனர். விக்ரம் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கும் இந்தப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் 21ஆம் தேதி முதல் சென்னையில் துவங்க இருக்கிறது. இதில் நயன்தாரா, கருணாகரன் ஆகியோர் கலந்துகொள்ள இருகின்றனர்.

Comments are closed.