க்ரைம் போலீஸ் vs ட்ராபிக் போலீஸ் ; பிப்-19ல் பலப்பரீட்சை..!

214

Miruthan vs sethupathi
வரும் பிப்-19ஆம் தேதி மிருதன், சேதுபதி என இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் மற்ற படங்கள் நைஸாக ஜகா வாங்கிவிட்டன.. உண்மைதான். கடந்த வருட தொடர் வெற்றிகளுக்கு பிறகு ஜெயம் ரவியும், ‘நானும் ரௌடி தான்’ வெற்றிக்குப்பிறகு விஜய்சேதுபதியும் ஒரே நாளில் கோதாவில் குதித்துள்ளதால் சண்டை உக்கிரமாகத்தானே இருக்கும்.

அருண்குமார் இயக்கியுள்ள சேதுபதியில் க்ரைம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றால், சக்தி சௌந்தர்ராஜனின் மிருதனில் ட்ராபிக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி.. யாருக்கு பவர் அதிகம், அல்லது இரண்டுபேருக்குமே சம அளவு பவரா என்பது பிப்-19ல் தெரிந்துவிடும்.. சேதுபதியில் ரம்யா நம்பீசன், மிருதனில் லட்சுமி மேனன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Comments are closed.