
ஆர்யாவின் அடுத்த படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்குகிறார் என்பது தெரியும் படத்திற்கு ‘தனிக்காட்டு ராஜா’ என சூப்பர்ஸ்டாரின் டைட்டிலையும் பிடித்துவிட்டார்கள்.. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் கேரளாவின் அதிரம்பள்ளி அருவி மற்றும் கொடைக்கானல் பகுதியில் தான் எடுக்கப்பட இருக்கின்றனவாம்..
இதிலிருந்து உங்களால் ஏதேனும் யூகிக்க முடிகிறதா..? எஸ்.. படத்தின் கதையில் காடு மிக முக்கிய பங்கு வகிக்கிறதாம். அதுமட்டுமல்ல, படத்தில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவராக நடிக்கிறாராம் ஆர்யா. கிட்டத்தட்ட ‘கும்கி’ பாணியிலான கதையாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. வலுவான சண்டைக்காட்சிகள் இருப்பதால் திலீப் சுப்பராயனை உள்ளே இழுத்துப்போட்டிருக்கிறார் இயக்குனர் ராகவன்.
Comments are closed.