தாத்தா-மகன்-பேரன் மூவருக்கும் பாடல் எழுதிய பஞ்சு அருணாசலம்..!

278

muthuramalingam
‘அன்னக்கிளி’ படத்தில் இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்து தயாரிப்பாளர்.. இல்லையில்லை, பாடலாசிரியர் பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் சேர்ந்து திரையுலகில் பல இனிமையான பாடல்களை கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு கால நட்பு இவர்களுடையது.

தற்போது கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்திற்கு பாட்டு எழுதுவதன் மூலம் 15 ஆண்டுகள் கழித்து இசைஞானி இளையராஜாவுடன் இணைந்துள்ளார் பஞ்சு அருணாசலம். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கவுதம் கார்த்திக்கின் தாத்தா முத்துராமனுக்கும் தந்தை கார்த்திக்கிற்கும் பாடல் எழுதிய பஞ்சு அருணாசலம், இப்போது மூன்றாம் தலைமுறை வாரிசுக்கும் பாடல் எழுதுவதுதான்.

அதுவும் ஒன்றல்ல.. இரண்டல்ல.. அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார் பஞ்சு அருணாசலம்.. கவுதம் கார்த்திக் ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கும் இந்தப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை ராஜதுரை என்பவர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார்.

Comments are closed.