
தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் சிவகுமார் நடத்திவரும் அகரம் பவுன்டேசனும் உடனடி உதவிகள் பலவற்றை செய்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை அகரம் அறக்கட்டளை தத்தெடுத்தது.
இந்த நிலையில், இந்த மழைவெள்ள சமயத்தில் தன்னலம் பாராமல் பணியாற்றிய தன்னார்வலர்களை கௌரவிக்கவும், அவர்களது சேவைகளை தொடர்ந்து ஊக்குவிக்கவும் அகரம் பவுண்டேசன் ஒரு மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த மாநாடு ஜனவரி 2 அல்லது 3 ஆம் தேதி செயின்ட்.பீட்டர்ஸ் பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. புதிய தலைமுறை, தி ஹிந்து மற்றும் அகரம் பவுண்டேஷன் இணைந்து இம்மாநாட்டை நடத்தவுள்ளது.
அகரம் பவுண்டேஷன் கல்வி சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் முதற்கட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்து அந்த பள்ளிக்கு தேவையான உதவிகள், பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் போன்றவற்றையும் மேற்கொள்ளவுள்ளது.
Comments are closed.