50 கிராமங்களுக்கு ‘சென்னை மைக்ரோ’ மூலம் உதவும் சித்தார்த்..!

241

Siddharth
கடந்த சில வாரங்களுக்கு முன் கொட்டி தீர்த்த மழைவெள்ளத்தில், எதைப்பற்றியும் கவலைப்படாமல், மக்களுக்கு உடனடியாக என்ன உதவி செய்யமுடியும் என முதல் ஆளாக வெள்ள நீரில் இறங்கியவர் நடிகர் சித்தார்த்.. முதலில் பெய்த மழையில் சென்னை பாதிப்புக்கு உள்ளானபோதே, வட இந்திய ஊடகங்கள் அதை பொருட்டாக கருதாமல் இருந்த மெத்தனத்தை முதல் ஆளாக சாடி கிறாள் கொடுத்தவரும் சித்தார்த் தான்.

இந்தமுறை நேரடியாக வெள்ள நீரில் இறங்கிய சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டார்.. இன்னொரு பக்கம் தன்னார்வலர்களை ‘சென்னை மைக்ரோ’ என்கிற அமைப்பை உருவாக்கி அதன் கீழ் ஒன்றிணைத்தார்.

இந்த சென்னை மைக்ரோ மூலமாக எங்கே பாதிப்பு, எங்கெல்லாம் உதவிகள் கிடைக்கின்றன, எங்கெல்லாம் மக்களை தங்கவைக்க முடியும் என ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி மீட்பு, நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார். ‘தி ரியல் ஹீரோ’ என அனைவரும் இவரை புகழ்ந்து தள்ளினர்.

வெள்ளம் வடிந்தபின்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப்பணிகளில் சென்னை மைக்ரோ கவனம் செலுத்தி வருகிறது.. தற்போது கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்க்கு மேல் இந்த நிவரன் உதவி குவிந்துள்ளது.

அதனால் தற்போது நன்கொடை பெறுவதை நிறுத்திவிட்டு அதிகம் பாதிக்கப்பட்ட 50 கிராமங்களை கணக்கெடுத்து அங்குள்ள மக்களின், குறிப்பாக குழந்தைகள் நலம், கல்வி, வீடுகள் மறு சீரமைப்பு உட்பட பல உதவிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.. இந்தப்பணிகளை மேற்கொள்வதற்காக AID INDIA என்கிற அமைப்புடன் கைகோர்த்துள்ளது இந்த சென்னை மைக்ரோ..

Comments are closed.