இரண்டு வருடங்களுக்கு முன் வித்தகன் படத்தை இயக்கிய பார்த்திபன் மீண்டும் தன்னை நிரூபிக்க இந்தமுறை வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார். படத்தின் பெயரே ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்பதுதான். 100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு தான் செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு படத்தின் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார். கூடவே A Film without a story என்றும் தனது வழக்கமான பாணியில் கேப்ஷன் வைத்துள்ளார் பார்த்திபன்.
இந்தப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் கதையே கிடையாதாம். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை. ஆனால் அவரது மகள் கீர்த்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜையை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடத்தினார் பார்த்திபன்.
படத்தை பற்றி பார்த்திபன் கூறும்போது, “கடந்த இரண்டு வருஷமா 40 கதைக்கு மேல எழுதிப்பார்த்தேன்; ஒண்ணும் செட்டாகல. கதையே இல்லாம ஒரு படம் எடுத்தா என்ன என்று தோணிச்சு. அதுதான் கதை திரைக்கதை வசனம், இயக்கம். கதையே இல்லாம எப்படிப்பா படம் எடுக்க முடியும்னு கேட்பாங்க. அப்படி கேக்கணுங்கறதுக்காகத்தான் படத்தையே எடுக்கிறேன். சொல்லப்போனா வாழ்க்கையில கதைன்னு ஒண்ணு கிடையாது. எல்லாமே சம்பவங்கள்தான். சினிமாலதான் கதை இருக்கும். மதன் கார்க்கி எழுதின காற்றில் கதை இருக்கு… என்ற பாட்டுதான் படத்தோட புரமோஷன் பாட்டு. அதை கேட்டீங்கன்னா படம் என்னென்னு தெரிஞ்சுடும். இது சவாலான முயற்சிதான்” என்கிறார்.
56936 192636Hi there, just became aware of your blog by means of Google, and discovered that it is genuinely informative. Im gonna watch out for brussels. I will appreciate in the event you continue this in future. Lots of folks will likely be benefited from your writing. Cheers! 307003