தமிழ்சினிமாவின் எவர்கிரீன் காமெடிப்படம் தான் ‘உள்ளத்தை அள்ளித்தா’. கார்த்திக், கவுண்டமணி, ரம்பா நடித்திருந்த இந்தப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். படத்தின் ஆரம்பத்திலிருந்து காட்சிக்கு காட்சி ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்த இந்தப்படத்தை ஒவ்வொருவரும் ஐந்து தடவைக்கு குறையாமலாவது பார்த்திருப்பார்கள்.
பதினேழு வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தப்படத்தை தற்போது ரீமேக் செய்யப்போவதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. படத்தில் ஹீரோவாக நடிப்பது கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திகேதான். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
தந்தை நடித்த படத்தின் ரீமேக்கில் மகன் நடிப்பது தமிழ்சினிமாவில் இது இரண்டாவது முறை. ஏற்கனவே தியாகராஜன் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தின் ரீமேக்கில் அவரது மகன் பிரசாந்த் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.