சந்தானத்தின் ரூட்டில் பயணிக்கும் சூரி

120

இன்றுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஈடுகொடுத்து காமெடி கேரக்டர்களில் சிறப்பாக நடித்துவருகிறார் சூரி. ஆரம்பத்தில் காதல், தீபாவளி என்று சில படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான் ஒரு காமெடி நடிகராக சூரியை அடையாளம் காட்டியது.

அடுத்து நான் மகான் அல்ல, களவாணி படங்கள் சூரிக்கு நல்ல வரவேற்பை கொடுக்க, வேலாயுதம் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்தார். மேலும் சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நகைச்சுவை ராஜாங்கமே நடத்தியிருந்தார் சூரி. தனுஷுடன் முதன்முறையாக நய்யாண்டி படத்திலும் இணைந்து நடித்த சூரியின் காமெடி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்பெல்லாம் இயக்குனர்கள் கொடுத்த ஸ்கிரிப்ட்டில் மட்டும் தனது திறமையை காட்டிய சூரி, தற்போது தனது படங்களின் நகைச்சுவைக்காட்சிகளில் மிகுந்த கவனம் செலுத்துவதோடு, சந்தானத்தின் பாணியில் சில சிச்சுவேசன்களுக்கான வசனங்களை தானே உருவாக்குகிறார். அவற்றை இயக்குனரின் ஒப்புதலோடு பேசி கைதட்டலையும் அள்ளுகிறார்.

தற்போது மீண்டும் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்து வருகிறார் சூரி. ‘வேலாயுதம்’ படத்தின் போதே இவருக்குள் இருந்த் ஆர்வத்தையும் திறமையையும் பார்த்த விஜய் ‘ஜில்லா’வில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார். சந்தானத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தபடியாக கைநிறைய படங்களுடன் நிற்க நேரமில்லாமல் படங்களில் நடித்துவருகிறார் சூரி.

Leave A Reply

Your email address will not be published.