காவல்துறை ஆணையரிடம் பாதுகாப்பு கோரும் பாண்டவர் அணி..!

198

வரும் 18ஆம் தேதி தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடிகர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து மோதுவதால் அரசியல் தேர்தல் களம் போல இந்த தேர்தலிலும் அனல் பறக்கிறது. அதனால் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் பாதுகாப்பு அளிக்குமாறு ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர் பாண்டவர் அணி.

தற்போது மாநகராட்சி காவல்துறை ஆணையரிடமும் பாண்டவர் அணியினர் பாதுகாப்பை பலப்படுத்தத் சொல்லி மனு கொடுத்துள்ளனர். மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறமால் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் வேண்டுகோள் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தங்கள் தரப்பில் இருந்து எந்தவித விதமான வன்முறையிலும் ஈடுபடமாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளனர்..

Comments are closed.