
நடிகர்சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இனி அமையவுள்ள சங்கத்துக்கு தென்னிந்திய நடிகர்சங்கம் என்கிற பெயரை மாற்றி, தமிழ் நடிகர்கள் என்கிற பெயரை சூட்டவேண்டும் என இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் வைத்துள்ளார்.. ஏற்கனவே நடிகர்சங்க தலைவராக சரத்குமார் பொறுப்பேற்றதுமே தமிழ் நடிகர்சங்கம் என பெயர் மாற்றுவதாக தீர்மானம் போடப்பட்டதையும் ஆனால் இதுநாள் வரை அது நிறைவேற்றப்படாமல் கிடப்பில் கிடப்பதையும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் வேறுமொழிகளை சேர்ந்தவர்களாக இருப்பதால் தான் இந்த அவல நிலை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள பாரதிராஜா, பல மொழிகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தமிழர்களாகத்தான் இருக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.. அதனால் நடிகர்சங்க தேர்தலில் ஒட்டுப்போடுபவர்கள் இதனை உணர்ந்து வாக்களிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments are closed.