தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் வெளியான, ‘அத்தரிண்டிகி தாரெதி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா, பிரணீதா நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர நதியாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்தார். கடந்த 27ஆம் தேதி வெளியான இந்தப்படம், ராம்சரண் நடித்த ‘மகதீரா’ படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
55 கோடியில் தயாரான இந்தப்படம் கடந்த இருநாட்களுக்கு முன்புவரை 173 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்தனைக்கும் ரொம்பநாள் தாமதமாகத்தான் இந்தப்படம் வெளியானது. அதுமட்டுமல்ல, படம் ரிலீஸாவதற்கு சிலநாட்களுக்கு முன்பே இணையதளத்தில் இந்தப்படத்தின் ஒன்றரை மணிநேர காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் இதனால் எல்லாம் படத்தின் கலெக்ஷன் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதைத்தான் தற்போதைய சாதனை நிரூபித்துள்ளது.
இந்த சாதனையை ‘மகதீரா’ படத்தின் இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி மனம் திறந்து பாராட்டியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்பு ‘மகதீரா’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிய அந்த நேரத்தில் தெலுங்கு சினிமாவும் நூறு கோடி கலெக்ஷனைத் தாண்டும் படங்களை உருவாக்கும் என சில ஜாம்பவான்கள் சொன்னார்கள். அப்போது அதை நான் ஒரு ஜோக்காகத்தான் நினைத்துக்கொண்டேன். ஆனால் இன்று பவன் கலயாண் படம் அதை உண்மையாக்கியுள்ளது” என்று பாராட்டு தெரிவித்துள்ளார் ராஜமௌலி.
460184 192244I truly prize your work , Excellent post. 304114