நேபாள துறவிகளை சந்திப்பதற்காக மொட்டையடித்துக்கொண்ட கிஷோர்..!

198

பயணம் சார்ந்த கதைகளில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால், படம் பார்க்கும் ரசிகனுக்கு கதை விறுவிறுப்பாக நகர்வதுடன் நாலு இடங்களையும் சுற்றிப்பார்த்த திருப்தியும் கிடைக்கும். அப்படி ஒரு கதையை கையில் எடுத்து ‘யாத்ரீகன்’ என்கிற பெயரில் படமாக இயக்கியுள்ளார் திரைப்பட கல்லூரி மாணவரான ஜெயபால் கந்தசாமி.

இது 10 வயது முதல் 45 வயது வரையுள்ள ஒரு மனிதனின் பயணக்கதை .கதையின் நாயகன் ஆதி. அவன் ஒரு முறை சிறை செல்ல நேர்கிறது. அடைபட்ட அறைக்குள் அவனுக்குள் இந்த உலகின் போக்குகள். நிகழ்வுகள் பற்றி பல கேள்விகள் அலையடிக்கின்றன. விடை தேடி அவனை அலைக்கழிக்கின்றன. தன் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தேடி பல இடங்களுக்கு பயணம் செய்கிறான். இதுதான் படத்தின் கதை.

ஆதியாக கிஷோரும், கதாநாயகியாக சாயா சிங்கும் நடித்துள்ளனர். இதற்கான படப்பிடிப்புக்காக படக்குழுவினர் நேபாளம், காங்க்டாக், சிலிகுரி, டார்ஜிலிங், வாரணாசி, காலிம்பான் போன்ற இடங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர்.​ இன்னமும் ஆறு இடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்கிறார் இயக்குனர் ஜெயபால்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், நேபாளத்தில் ஒரு புத்த மடாலயத்துக்கு சென்று படப்பிடிப்பு தொடர்பாக பேசவிரும்பியபோது அதன் உள்ளே நுழைய வேண்டும் என்றால்கூட தலை மழித்து அவர்களுடைய உடையை அணிந்து வந்தால்தான் அனுமதி என்று கூறிவிட்டார்களாம்.​ஆனால் சற்றும் யோசிக்காத கிஷோர் அதற்காக தலையை மழித்துக் கொண்டு உள்ளே சென்று அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.​

Comments are closed.