‘தனி ஒருவன்’ மீது ஆர்வம் காட்டும் ராம்சரண்..!

221

இந்தியில் சல்மான்கான் தயாராகிறார் என்பதாக கேள்வி.. தெலுங்கில் மகேஷ்பாபுவாக இருக்கலாம் என்கிறபோதே, இல்லையில்லை ராம்சரண் தேஜா ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார் என்கிறார்கள். எல்லாம் கூடிவந்தால் ராம்சரண் ஒகே சொல்லத்தான் அதிகம் வாய்ப்பு இருக்கு என்கிறார்கள். காரணம் படத்தின் காட்சிகள் பிரேம் பை பிரேம் அவரை இம்ப்ரெஸ் செய்துவிட்டதாக கேள்வி. வேறென்ன.. எல்லாம் ‘தனி ஒருவன்’ படத்தின் ரீமேக்கில் யார் நடிக்க போகிறார்கள் என்பதை பற்றித்தான்.

இந்த வருடமும் ‘தனி ஒருவன்’ படம் வெளியான நாளும் இயக்குனர் மோகன்ராஜாவுக்கு மறக்க முடியாதபடி இனிமையான நாளாக, வருடமாக அமைந்துவிட்டது.. இப்படி அவரது கதையில் வெவ்வேறு மொழியை சேர்ந்த ஸ்டார்கள் நடிக்க இருப்பதாக வரும் தகவல்கள் இன்னும் சில நாட்களுக்குள் உறுதியான அறிவிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.