நயன்தாராவிடம் கதைசொல்ல பயந்த இயக்குனர்..!

218

அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாயா”. சூப்பர் நேச்சுரல் படமான இதில் நயன்தாரா கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆரி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இந்த வேடத்தில் முதலில் நானி தான் நடிப்பதாக இருந்ததாம்.

படத்தில் ஆரி பிரபலமான பத்திரிகைகளுக்கு ஓவியம் வரையும் நபராக வருகிறார். அவர் வரையும் ஓவியங்களில் இருந்து தான் கதையின் ஒவ்வொரு முடிச்சும் அவிழுமாம். பொடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.. இந்தப்படத்திற்காக நயன்தாராவிடம் கதைசொல்ல போனதே த்ரில்லிங்கான அனுபவம் என்கிறார் இயக்குனர் அஷ்வின்.

“நான் இந்த படத்தின் கதையை எழுதும் போது என் மனதில் யாரையும் வைத்து எழுதவில்லை. படத்தின் தயாரிப்பாளருக்கு கதை கேட்டவுடன் இந்த கதையில் முக்கிய பாத்திரமாக வரும் அந்த அம்மா கதாபாத்திரத்தில் நயன்தாரா அவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது, நயன்தாராவிடம் கதை சொல்ல எனக்குள் சின்ன பயம் இருந்தது. ஆனால் நான் கதையை சொல்லி முடித்ததும் அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது, கண்டிப்பாக படத்தில் நடிக்கிறேன் என்று கூறியதும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்” என்கிறார் இயக்குனர் அஷ்வின்.

இந்தப்படம் வரும் செப்-17ல் வெளியாக இருக்கிறது.

Comments are closed.