
புலி வருது.. புலி வருது என்பது உண்மையிலேயே பொய்யாக இல்லாமல் நிஜமாக செப்-17ல் வெளியாக இருக்கிற விஜய்யின் ‘புலி’ படத்திற்கான ட்ரெய்லர் பயங்கரமான உறுமலுடன் வெளியகியுள்ளது. சிம்புதேவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது இந்தப்படத்தின் கதையை ஒரு சரித்திர கதை என்பதைவிட, அம்புலிமாமா பத்திரிகையில் நாம் படித்த அழகான கற்பனைக்கதை என்று தாராளமாக சொல்லலாம்.
ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள குள்ள மனிதனும் சரி.. ராட்சச மனிதனும் சரி.. நம் ஆவலை தூண்டவே செய்கிறார்கள். வாள் சண்டையில் விஜய் பல வித்தைகளை காட்டுவார் என்பது நன்றாகவே தெரிகிறது. ‘பாசம் வைத்தால் நான் பனி.. பகை வைத்தால் நான் புலி’ என்கிற பஞ்ச் சாம்பிள் ஒன்று போதும், புலி எந்த அளவுக்கு சீறிப்பாயப்போகிறது என்று. வரட்டும் பார்த்துவிடுவோம்.
Comments are closed.