கூவத்தை உரமாக மாற்றும் முயற்சியில் இறங்கிய பார்த்திபன்..!

183

பார்த்திபன் இப்போது சென்னையை தாண்டி ஒதுக்குப்புறமாக இடம் ஒன்றை வாங்கி நகரத்தின் இரைச்சலை விட்டு அமைதிக்காக அவ்வப்போது அங்கே சென்று வருகிறார். அந்த பகுதியில் பசுமையாக காட்சியளிக்கும் மரங்களை பார்த்து தனது இடத்திலும் பசுமையாக மரக்கன்றுகளை நட்டுவைத்து வளர்க்க முடிவு செய்துள்ளாராம்.. 

ஆனால் அந்த மண்ணில் மரம் நன்கு வளரவேண்டுமென்றால் இயற்கை உரம் இடவேண்டுமாம்.. அதற்கு கழிவுகளை மட்கச்செய்து அவற்றையே உரமாக்கிப்போடலாம் என சிலர் ஆலோசனை சொன்னார்களாம். இன்று காலை ஏதேச்சையாக கூவம் நதிக்கரைப்பக்கம் வந்தவருக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியதாம்.

அதாவது புதிகாக கழிவுகளை மட்கச்செய்து இயற்கை உரத்தை உண்டாக்குவதை விட, ஏற்கனவே மட்கிப் போயிருக்கும் கூவம் நதியில் உள்ள கழிவுகளை, தோட்டம் வைத்திருப்பவர்கள் எல்லாம், ஆளுக்கொரு லாரி வைத்து அள்ளிச்சென்றால் தோட்டத்திற்கும் உரமாகும்.. கூவமும் சுத்தமாகுமே என்கிறார் பார்த்திபன். இதுகுறித்து மேயர் சைதை துரைசாமியிடமும் பேச இருக்கிறாராம் பார்த்திபன்.

Comments are closed.