50வது நாளை தொட்டது விஷ்ணு படம்..!

242

ஒரு படத்திற்கு திரும்பத்திரும்ப ஆடியன்ஸை வரவழைப்பது, ரிலீஸான பின் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகிய நிகழ்வுகள் தானாகவே நடந்தால் அந்தப்படம் ஐம்பது நாள் என்ன, நூறு நாட்கள் கூட தாராளமாக ஓடும்.. விஷ்ணு நடித்த ‘இன்று நேற்று நாளை’ படம் இன்று 50வது நாளை தொட்டிருப்பதும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது..

கற்பனைக்கு கொஞ்சமும் தடைபோடாத டைம் மிஷின் கதை, அதில் எந்த அளவுக்கு ரசிகர்களை குழப்பாமல் கதை சொல்ல முடியுமோ அதை சரியாக செய்த இயக்குனர் ரவிக்குமாரின் எளிமையான திரைக்கதை, விஷ்ணு-கருணாகரன் காமெடி, கதாநாயகி மியாவின் நடிப்புடன் கூடிய அழகு என ஒரு படத்திற்கு தேவையான சகல அம்சங்களும் இருந்ததுதான் இந்தப்படம் 50வது நாளை தொட காரணம் என்பது யாராலும் மறுக்க முடியாதது..

Comments are closed.