
நடிகை என்று சொல்வதை விட தயாரிப்பாளர் என்கிற புதிய பரிமாணத்தில் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் ‘சென்னை–28’ புகழ் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற அடையாளம் மறையும் அளவுக்கு, சென்னை-28 படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘கற்றது களவு’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
கடந்த வருடம் ‘ஆடாம ஜெயிச்சோமடா’, ‘வெண்ணிலா வீடு’ என இரண்டு படங்களில் நடிகையாக நல்ல பெயரை வாங்கியவர், தற்போது ஒரு தயாரிப்பாளரக மாறி தனது வருங்கால கணவர் இயக்கத்தில் ‘பண்டிகை’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் விஜயலட்சுமிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments are closed.