நந்தாவின் நட்பு.. ரஞ்சித்தின் துரோகம்.. நடுவில் சிக்கிய ஜீவன்..!

218

 

தற்போது, மீண்டும் சினிமாவில் தலைதூக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ‘திருட்டு பயலே’ ஜீவனுக்கு, தான் இயக்கும் ‘அதிபர்’ படம் மூலம் கைகொடுத்துள்ளார் இயக்குனர் சூர்யபிரகாஷ். ‘மாயி’ படத்தின் மூலம் சரத்குமாரை வித்தியாசமாக காட்டினாரே அவரேதான். செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன். என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழும் சிவா கதாபாத்திரத்தில் ஜீவன் நடிக்கிறார்.

நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் ரஞ்சித் நடிக்க, அடிதடியையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் டேவிட் என்ற வித்தியாசமான ரௌடி வேடமேற்கும் நந்தா, நட்புக்காக நல்லவனாக மாறி வாழும் கதாபாத்திரம் ஏற்கிறார். கதையின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.

Comments are closed.