“முதல்தடவையா சம்பளம் வாங்கிட்டு நடிக்கிறேன்” – ‘ரு’ விழாவில் பேரரசு ருசிகரம்..!

206

 

பஞ்ச பாண்டவர்கள், பஞ்ச பூதங்கள் என இதிகாசம் முதல் சமீப காலம் வரை ஐந்து என்ற எண் மிகவும் முக்கியத்துவம் உள்ள எண்ணாகவே பார்க்கப்படுகிறது. ‘ரு’ என்ற தமிழ் எழுத்துக்கு ஐந்து என்று ஒரு அர்த்தம் உண்டு. அந்தவகையில் ‘ஜி’, ‘தீ’, ‘உ’ என ஒற்றை எழுத்தில் தலைப்பு வைக்கும் வரிசையில்  அடுத்த வரவிருக்கும் படம் தான் ‘ரு’.

சமூகத்தில் வாழக்கூடாத, வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட புறப்படுகிறான் ஒரு இளைஞன். சினிமாவில் நாயகனாக வர  கனவு காணும் அவன், நிஜ வாழ்வில் நாயகனாக ஆகிறானா என்பதை அந்த ஐந்து பேர்தான் தீர்மானிக்கின்றனர். சர்வதேச அரங்கில் நமது நாட்டை தலைகுனிய வைக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை படம்  பிடித்து காட்ட இருக்கிறது இந்த ‘ரு.

விஜய் டிவி ‘புகழ்’ இர்பான் தான் ‘ரு ‘ படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரக்சிதா நடிக்க, இயக்குனர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குனர் பேரரசு திருமலையிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சி.சதாசிவம் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் வி.ஜி.பி அதிபர் சந்தோசம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, “என் படத்துல நான் நடிச்சாலே பெரிய பஞ்சாயத்தா இருக்கும். ஆனா இந்தப்படத்துல ஒரு நல்ல கேரக்டரோடு இயக்குனர் சதாசிவம் வந்தப்ப என்னால மறுக்க முடியல.. படத்துல ஸ்ட்ராங்கான மெசேஜ் இருக்கு.. முக்கியமான விஷயம் என்னன்னா இதுவரைக்கும் என் படத்துல நடிச்சதுனால காசு வாங்காம நடிச்ச நான், இந்தப்படத்துல முதல் முறையா சம்பளம் வாங்கிட்டு நடிக்கிறேன்” என்றார்.

Comments are closed.