
ஓகே.. விஜய்சேதுபதி பீல்டிற்கு கதாநாயகனாக வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.. விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து, பெயர் சொல்லும்படியான ஹிட்டுகளையும் கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகராகவும் பெயர் வாங்கியாகி விட்டது. அடுத்து ஒவ்வொரு இளம் நடிகரின் கனவு கதாபாத்திரமான போலீஸ் கேரக்டரில் நடிக்க இனி என்ன தடை..?
ஆசை இருந்தாலும் பொருத்தமான கதை வேண்டாமா..? தன்னை வைத்து ஏற்கனவே ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார், அப்படி நேர்மை தவறாத ஒரு போலீஸ் அதிகாரி கதையை கொண்டுவந்தபோது விஜய்சேதுபதிக்கு இதுதான் சரியான நேரம் என மனதில் படவே உடனே அக்ரிமென்ட் சைன் பண்ணிவிட்டார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் சரியாக போகவில்லை என்றாலும் அருண்குமாரின் திறமை மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதால், விஜய்சேதுபதி இதற்கு உடனே ஓகே சொல்லிவிட்டார். ‘பீட்சா’வில் விஜய்சேதுபதியுடன் அவ்வளவு அன்னியோன்யமாக நடித்த ரம்யா நம்பீசன் இந்தப்படத்தில் இரண்டாவது முறையாக அவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
‘மின்னலே’ படத்தை தொடர்ந்து கௌதம் மேனனும், ‘தமிழ்’ படத்தை தொடர்ந்து ஹரியும் தங்களது கேரியரில் இரண்டாவது படமாக போலீஸ் ஸ்டோரியை செலக்ட் செய்து மெகா ஹிட்டாக்கி இன்றைக்கு டாப் ரேங்க்கில் உள்ளனர். அருண்குமாருக்கும் இந்த செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகட்டும் என வாழ்த்தலாமே.
Comments are closed.