விவேக்கிற்காக பாடிய அனிருத்..!

225

பாக்யராஜுக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்த அந்த 7 நாட்கள் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இதில் அவர் நடித்த ‘பாலக்காட்டு மாதவன்’ கேரக்டரும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது தெரிந்ததுதான். ‘பாலக்காட்டு மாதவன்’ என்கிற பெயரிலேயே உருவாகும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சின்ன கலைவாணர் விவேக்.

இதெல்லாம் இரண்டுவருடத்திற்கு முந்தைய பழைய செய்தி.. ஆனால் பாலக்காட்டு மாதவனை ட்ரெண்டிங்கிற்கு இழுத்துவரும் அளவுக்கு ஒரு புதிய நிகழ்வு நடந்திருக்கிறது. ஆம்.. இந்தப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவா இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின்போதே விவேக்கும் அனிருத்தும் நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் வந்தனர்.

அந்த நட்பின் அடிப்படையில், விவேக்கின் கோரிக்கையின் பேரில் அனிருத் இந்தப்பாடலை பாடியுள்ளதாக விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார். விரைவில் யூ-டியூப்பில் இந்தப்பாடல் வெளியாக இருக்கிறதாம். இந்தப்படத்தில் விவேக்கிற்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்க, ஒரிஜினல் பாலக்காட்டு மாதவனாகிய பாக்யராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Comments are closed.