‘அட்டக்கத்தி’ மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ மூலம் லைம்லைட்டிற்கு வந்தவர் நந்திதா. கடந்த வருடத்தில் இவர் நடித்த மூன்று படங்களில் ‘முண்டாசுப்பட்டி’யின் வெற்றி இவரை ராசியான கதாநாயகி என்கிற இடத்தை தக்கவைத்துக்கொள்ள உதவியது.
தற்போது சீனு ராமிசாமியின் இடம் பொருள் ஏவல் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதில் நந்திதா ‘வெண்மணி’ என்கிற கேரக்டரில் நடிக்கிறார். படத்தில் இவருக்கு மலைவாழ் பெண் வேடம் என்பதால் இயக்குனர் சீனு ராமசாமி இவரது கெட்டப்பையே டோட்டலாக மாற்றிவிட்டாராம்.
நந்திதா நடித்த காட்சிகள் அனைத்தும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தான் படமாக்கப்பட்டுள்ளதாம். இந்தபடம் தான் நந்திதா இதுவரை நடித்த படங்களிலேயே அவரை செம த்ரில் வாங்கிய படமாம். ஆனாலும் இதுதான் அவரின் பேவரைட் படமும் கூடவாம்.
Comments are closed.