‘சூதாடி’க்கு மூணு நாள் கேப் கொடுத்தா போதும்..!

170

பாலாஜி மோகன் டைரக்சனில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்துவரும் ‘மாரி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப்படத்தை முடித்தவுடனே மார்ச்சில் ‘வேலையில்லா பட்டதாரி’ டீமுடன் அடுத்த படத்தை ஆரம்பிப்பதாக பிளான் வைத்திருக்கிறார் தனுஷ்.

 

இந்தப்படத்தை ஜூன் இறுதிக்குள் முடித்துவிட்டு, ஜஸ்ட், ஒரு மூன்று நாள் இடைவெளி மட்டும் விட்டு, அப்படியே வெற்றிமாறனின் டைரக்சனில் ‘சூதாடி’ படத்தை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ‘ராஞ்சனா’ இயக்குனர் ஆனந்த் எல் ராய் வேறு, தனுஷை மீண்டும் பாலிவுட்டுக்கு அழைத்துச்செல்ல தயாராக காத்திருக்கிறார். வரிசை கட்டும் படங்களை பார்த்தால், ஒரு வருடத்திற்கு தனுஷ் ராத்திரி, பகல் பாராமல் ஓடவேண்டியிருக்கும் என்றே தெரிகிறது.

Comments are closed.