விக்ராந்த்துக்கு உதவிக்கரம் நீட்டிய உதயநிதி..!

177

சோலோ ஹீரோவாக, நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்தும் கூட சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறிவந்த விக்ராந்திற்கு சுசீந்திரனின் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த ‘பாண்டியநாடு’ படம் ஆறுதல் தந்தது. அந்தப்படத்தில் விக்ராந்தின் கேரக்டரும் நடிப்பும் பேசப்படவே, ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் அதுபோன்ற நல்ல ஒரு கதைக்காகவும், கேரக்டருக்காகவும் காத்திருந்தார் விக்ராந்த்.

 

இப்போது அப்படி ஒரு கேரக்டர் விக்ராந்த்தை தேடி வந்துள்ளது. மான் கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் உதயநிதியை வைத்து இயக்கிவரும் படத்தில் இப்போதும் விக்ராந்தும் இணைந்திருக்கிறார். இதுகுறித்து உதயநிதியே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். உதயநிதி ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Comments are closed.