விஜய் பிறந்தநாளன்று பாயும் ‘புலி’..!

228

தீபாவளி, பொங்கல் என பண்டிகைகளில் ஸ்டார் படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் என்றால், நடிகரின் பிறந்தநாளன்று படம் வெளியாவது டபுள் சந்தோஷம் தான். கண்ணுக்கு எட்டிய வரையில் ஒரே ஒரு முறை மே-1ல் அஜித்தின் ‘வாலி’யும், டிச-12ல் ரஜினியின் லிங்கா’வும் அவர்கள் பிறந்த தேதியில் வெளியாகின. விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் அந்த அதிர்ஷ்டம் இந்தமுறை வாய்க்கும் என்றே தெரிகிறது.

 

ஆம்.. விஜய் பிறந்தநாளான ஜூன்-22ஆம் தேதி அவர் நடித்துவரும் ‘புலி’ ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்தப்படத்தில் மூன்று ரோல்களில் விஜய் நடிக்கிறார். கமாண்டோ, கார்ட்டூனிஸ்ட் என இரண்டு வேடங்களும் இன்னொன்று சஸ்பென்ஸ் ஆகவும் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்ட படப்பிடிப்புக்கும் இடைவெளி விடாமல் முழுமூச்சாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் சிம்புதேவன்.

 

ஹன்ஷிகா, ஸ்ருதிஹாசன் என இரட்டை கதாநாயகிகள், ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜின் ஒளிப்பதிவு, தேவிஸ்ரீபிரசாத்தின் இசை ஆகியவற்றுடன் ஸ்ரீதேவி, சுதீப் என படத்திற்கு மெருகேற்றும் பிரபலங்களும் இருக்கிறார்கள்.. கேரளாவின் முன்னணி விநியோகஸ்தரான தமீம்ஸுடன் இயக்குனரும் மக்கள் தொடர்பாளருமான பி.டி.செல்வகுமார் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

Comments are closed.