காட்ஸ் அன்ட் கிங்க்ஸ் vs ஆக்சன் ஜாக்சன் – இன்று ஆரம்பமாகிறது பலப்பரீட்சை..!

211


பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் உருவாகியுள்ள ‘ஆக்சன் ஜாக்சன்’ படம் இன்று வெளியாகிறது. நடனம் மற்றும் ஆக்சன் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப்படத்தில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரிய தமிழ்ப்படங்கள் எதுவும் இந்த வாரம் ரிலீஸ் ஆகாததால், தனி ஆளாக கலக்கலாம் என்கிற எண்ணத்தில் களம் இறங்கிய இந்த ஆக்சன் ஜாக்சனுக்கு டப் கொடுக்கும் விதமாக கூடவே இன்று வெளியாகிறது ஹாலிவுட் படமான காட்ஸ் அன்ட் கிங்க்ஸ் (Exodus: Gods and King).

பேட்மேன் படங்களில் நடித்து வாகை சூடிய கிறிஸ்டியன் பாலே நடித்திருக்கும் இந்தப்படத்தை 20 செஞ்சுரி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கிறிஸ்டியன் பாலே இந்தப்படத்தில் மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்க போராடும் கிறிஸ்து காலத்து மோசஸாக நடிக்கிறார்.

Comments are closed.