‘நான்’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஜீவா சங்கரின் உதவியாளர் ராபர்ட் எஸ்.ராஜ் ‘களம்’ என்கிறபடத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒரு வீட்டை மையமாகக் கொண்ட இப்படத்தின் போக்கைதீர்மானிக்கும் ஆறு முக்கிய கதாபாத்திரங்களாக ‘வெண்ணிலா கபடி குழு’ ஸ்ரீனிவாசன், ‘சுட்ட கதை’ நாயகி லட்சுமி பிரியா, எஸ்.எஸ்.மியூசிக் பூஜா, ஹம்ஜத் மற்றும் கனி நடித்துள்ளனர்.
இக்கதை முழுக்க முழுக்க பார்வையாளர்களின் நிலையில் இருந்து எழுதப்பட்ட கதை. அதனால் எளிதில் புரியக் கூடியதாகவும், நிறைய ஆச்சரியமூட்டும் விஷயங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் படக்குழுவினர்.. படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
Comments are closed.