‘வெண்நிலா வீடு’ படத்துக்கு இயக்குனர் இமயம் பாராட்டு..!

242

இன்றைய வாழ்க்கையில் அத்தியாவசிய ஆடம்பர பொருளாகிவிட்ட தங்கம், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை எப்படி சீர்குலைக்கிறது என்பதையும் இயல்பாக, அமைதியாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை தடம் புரண்டால் ஒரு குடும்பத்தலைவன் எப்படி நொடிந்துபோவான் என்பதையும் கடந்த மாதம் வெளியான ‘வெண்நிலா வீடு’ படத்தில் உறைக்கிற மாதிரி சொல்லியிருந்தார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.

இவர் பாரதிராஜாவின் பாசறையில் இருந்து வந்தவர். ‘வெண்நிலா வீடு’ அதனால்தான் நகரத்து படம் என்றாலும் அதை கிராமத்தின் வேர்கள் தான் முட்டுக்கொடுத்து தாங்கியிருக்கின்றன என்பதையும் அழகாக காட்சிப்படுத்திருந்தார்.

படத்தை பார்த்த பாரதிராஜா, இது . ‘வெண்நிலா வீடு அல்ல, வெள்ளித்திரை சொல்ல மறந்த வெண்பனி வீடு” என பாராட்டியிருக்கிறார். இந்தப்படத்தில் நமது கிராமத்து கலாச்சாரத்தை நான்கு அடிக்குள் வைத்து வீடுகட்டி விளையாடியது கண்டு பெருமைப்படுகிறேன் என இயக்குனர் வெற்றி மகாலிங்கத்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார்

Comments are closed.