தெற்கத்தி மக்களுக்கு ஷ்ரேயா ரெட்டியின் தீபாவளி கிப்ட்..!

208

‘திமிரு’ படத்துல வில்லித்தனம் காட்டிய ஸ்ரேயா ரெட்டி பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.. படத்தின் பெயர் என்ன தெரியுமா..? ‘அண்டாவ காணோம்’. இந்தப்படத்தில் கதாநாயகியாக அல்ல என்றாலும் கதையின் நாயகியாக நடிப்பதில் ஸ்ரேயா ரெட்டிக்கு சந்தோசம் தான்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை பகுதிகளில் நடைபெற்றபோது அந்த பகுதிகளை சேர்ந்த உள்ளூர் மக்கள் சிலரும் ஸ்ரேயாவுடன் சேர்ந்து படத்தில் நடித்துள்ளனர். அவர்களுக்கு சின்னச்சின்ன கேரக்டர் தான் என்றாலும் கூட அவர்கள் ஸ்ரேயாவிடம் காட்டிய அன்பு என்னவோ அளவிட முடியாதது.

இவர்கள் காட்டிய அன்பினால் நெகிழ்ந்துபோன ஸ்ரேயா இந்த தீபாவளி பண்டிகையில் அவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் விதமாக அந்த கிராமங்களை சேர்ந்த 1௦௦ பேரின் குடும்பத்துக்கு புத்தாடை, இனிப்பு பட்டாசு மற்றும் வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வழங்கி தன் அன்பை வெளிப்படுத்த இருக்கிறார். இந்த தீபாவளி கிப்ட்டை இன்று பரிசளிக்கிறார் ஸ்ரேயா.

Comments are closed.