
நடிகைகளில் நடிப்பு, சம்பாத்யம், தன் குடும்பம் என இருக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்ஷிகா ரொம்பவே வித்தியாசமானவர். தனது ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி, ஒரு குழந்தையை அவர் தத்து எடுக்கிறார். அந்தவகையில் அவர் தற்போது 3௦ குழந்தைகள் வரை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது ஊட்டியில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தின் ஷூட்டிங்கில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கும் ஹன்ஷிகா அந்த குழந்தைகளுடன் இந்த வருடம் தீபாவளியை கொண்டாடுவதற்காக கிளம்பு இருக்கிறார்.
ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஊட்டியில் இருந்து நாளை ஹைதராபாத் செல்லும் ஹன்ஷிகா அதை முடித்துவிட்டு குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட அப்படியே மும்பை செல்கிறார்.
Comments are closed.