மும்பை திரைப்படவிழாவில் மூன்றாம் படமாக ‘குற்றம் கடிதல்’..!

195

 

‘குற்றம் கடிதல்’ என அட்சர சுத்தமாக தனது படத்துக்கு தமிழில் பெயர் சூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரம்மா..  ஐந்து பல்வேறு வழக்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்கை, அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவம், அதன் அடிப்படையில் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை  சித்தரிக்கும் கதைதான் ‘குற்றம் கடிதல்’.

தரமான படங்களை தயாரித்து வெளியிடும் ஜே எஸ் கே பிலிம் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.     இந்தப்படம் ஜிம்பாப்பே நாட்டில் நாளை  முதல் வரும் 11ஆம் தேதி வரை  நடக்கவுள்ள சர்வதேச திரை பட விழாவில் கலந்துக் கொள்ள தகுதி பெற்றுள்ளது. 

இன்னொரு பக்கம் வரும் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை  நடக்க உள்ள 16ஆவது மும்பை திரைப்பட விழாவில் ‘இந்திய திரை அரங்கில் புதிய முகங்கள்’ என்ற தகுதியின் கீழ் திரையிடப்பட உள்ளது. தமிழ் படங்களில் ஆயிரத்தில்ஒருவன்,  ஆரண்யா காண்டம் படங்களை அடுத்து இந்த ‘குற்றம் கடிதல்’ படம் தான் மூன்றாவதாக மும்பை திரைப்பட விழாவிலும் திரையிடப்பட உள்ளது.

Comments are closed.