
வேலைவெட்டிக்கு போகாமல் கிராமத்தில் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் ராஜேஷுக்கும், பக்கத்து ஊர் பெரிய மனிதரின் மகளான கௌரி நம்பியாருக்கும் இடையே காதல் வருகிறது. ஊரில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் கௌரியின் அப்பாவிற்கு மகள் காதல் பற்றித் தெரியவர மகளைக் கண்டிக்கிறார். ராஜேஷை அடித்துக் கொடுமைப்படுத்துகிறார்.
இருந்தாலும் காதலர்கள் அவர்கள் காதலில் வலிமையாக இருக்கிறார்கள். கௌரியின் முறைமாமன் கையில் காதல் ஜோடிகள் சிக்க அவன் ராஜேஷ் கண் முன்னே கௌரியை கொலை செய்கிறான். ராஜேஷையும் கொலை செய்ய முயற்சிக்கிறான். ராஜேஷ் தப்பினாரா? தன காதலியை கொன்றவர்களை என்ன செய்தார் என்பதுதான் க்ளைமாக்ஸ்..
தமிழ்சினிமாவுக்கு இந்த கதை நடக்கும் களம் புதுசு. இந்த கதாநாயகன் புதுசு. அவரின் கதாபாத்திரம் புதுசு. காதலியை அவர் காதலிக்கும் விதம் புதுசு.. காதலும் புதுசு.. கதாநாயகி தன் காதலனை தேர்ந்தெடுப்பது புதுசு.. வில்லன்களின் குரூரம் புதுசு.. கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டும் புதுசு..
மொத்தத்தில் வலியுடன் ஒரு காதலை வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் சஞ்சீவன். தியேட்டரில் சென்று பார்க்கும்போது படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த வலியை உணரவைத்திருக்கிறார்
Comments are closed.