கன்னட திரையுலகின் ‘தாதா’வாக மாறுகிறார் பார்த்திபன்..!

209


தமிழ் சினிமா உலகை தாண்டி ஏற்கனவே ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக’, ‘மேல்விலாசம்’, ‘எஸ்கேப் ஃப்ரம் உகாண்டா’ என மூன்று மலையாள படங்களில் நடித்துள்ள பார்த்திபன் அங்கே அவருக்கென குறிப்பிட்ட ரசிகர்களையும் வைத்துள்ளார்.

அதேபோல இப்போது முதன்முறையாக ‘தாதா’ என்கிற படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்.‘கேம்பகோலா லவ்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய சந்தோஷ் இந்தப்படத்தை இயக்குகிறார்.

“கன்னட திரையுலகில் இருந்து கடந்த பத்து வருடங்களாக என்னை நடிக்க அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் ஒதுங்கிவிட்டு இப்போது நான் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பது என் சுயநலத்திற்காக.. ஆம் தமிழில் நான் நடிக்கும், இயக்கும் படங்களுக்கு கன்னட திரையுலகில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கவே அங்கே நுழைகிறேன்” என கூறியுள்ளார் பார்த்திபன்.

Comments are closed.